மருத்துவ படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – தமிழக அரசு பதில்!!
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு குறித்த வழக்கில், அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கவே இந்த திட்டத்தை செயல்படுத்தினோம் என தமிழக அரசு பதிலளித்துள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு:
தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு அதனை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தனியார் பள்ளி மாணவர்களும், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கமும் வழக்கு தொடர்ந்தனர். இதன்படி தனியார் பள்ளி & அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டது.
ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்- தமிழக அரசு அறிவிப்பு!!
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளவை, “அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உருவாக்கவே இந்த திட்டம் பல ஆய்வுகளின் அடிப்படையில் ஆராய்ந்து கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டம் குறித்து விதிமீறல் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது. இந்த இடஒதுக்கீடு வழங்கினாலும் நீட் தேர்வில் 50% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீடாகவே உள்ளது. எனவே இந்த திட்டம் குறித்து எதிர்தரப்பு சார்பில் கூறப்பட்ட தவறான மனுவை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!
அதன்படி இந்த மனு குறித்து எதிர்தரப்பினர் கால அவகாசம் கேட்டதால் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மருத்துவ படிப்புகளில் 10% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து புதுச்சேரி அரசு மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு அறிவிப்பான நீட் தேர்வு நோக்கத்தை சீரழிக்கும் இந்த திட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்