அரசு கணினி பயிற்றுநர் காலியிடங்களுக்கான கலந்தாய்வு – 36 ஆசிரியர்கள் தேர்வு!!

0
அரசு கணினி பயிற்றுநர் காலியிடங்களுக்கான கலந்தாய்வு - 36 ஆசிரியர்கள் தேர்வு!!
அரசு கணினி பயிற்றுநர் காலியிடங்களுக்கான கலந்தாய்வு - 36 ஆசிரியர்கள் தேர்வு!!
அரசு கணினி பயிற்றுநர் காலியிடங்களுக்கான கலந்தாய்வு – 36 ஆசிரியர்கள் தேர்வு!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 2 நாட்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 36 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர்கள் கலந்தாய்வு:

தமிழகத்தில் முதன்முறையாக தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்த கணினி ஆசிரியர்கள் 742 பேருக்கு மதுரையில் உள்ள 26 காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற கலந்தாய்வில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணையை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முதல் கருத்துக்கேட்பு!!

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடம் வழங்கும் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் மாவட்ட கல்வி அலுவலர்கள் இரா. ளர்மதி, முத்தையா, ப.இந்திராணி, ஏ.பங்கஜம் ஆகியோர் கலந்து கொண்டனர். 2018-19 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்வானவர்களுக்காக கலந்தாய்வு நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

சுமார் 742 தேர்வர்களின் 2 கட்டங்களாக பிரித்து வரிசை எண் 1 முதல் 400 வரை உள்ள சனிக்கிழமையும் 401 முதல் 742 வரை ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் காலியாக உள்ள பணியிடங்களில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் முத்துராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ச.சின்னத்துரை ஆகியோர் செய்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here