அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

0
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி:

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கான அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யா இயற்கை உபாதை கழிக்க சென்ற போது கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியானார்.

1 முதல் 5ம் வகுப்பு வரை மார்ச் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

1995 ஆம் ஆண்டு அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் 25 ஆண்டுகளாக இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளி சரண்யா இறப்பு குறித்து அரசு எந்த இழப்பீடோ அல்லது குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை என எதுவுமே வழங்கவில்லை. எனவே சரண்யா குடும்பத்திற்கு இழப்பீடு அல்லது அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தாய் மொழியில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு – பிரதமர் மோடி உரை!!

மேலும் அனைத்து அரசு அலுவகங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குடிநீர், கழிப்பறை, போன்றவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கு குறித்த விசாரணையை 4 வாரங்கள் ஒத்திவைக்கும்படி உத்தரவிட்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!