தமிழக அரசு பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு – மாநகராட்சி நடவடிக்கை!

0
தமிழக அரசு பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு - மாநகராட்சி நடவடிக்கை!
தமிழக அரசு பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு - மாநகராட்சி நடவடிக்கை!
தமிழக அரசு பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு – மாநகராட்சி நடவடிக்கை!

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வருகைப்பதிவை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகை பதிவு:

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 14,897 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களிலும், அம்பத்தூர் மண்டலத்தில் பகுதி அளவும் தூய்மைப் பணி மற்றும் சாலைப் பணிகளில் ஈடுபடும் 9,048 நபர்களும் அடங்குவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் திருவொற்றியூர் மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளில் 3220 பேரும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டல தூய்மைப் பணிகளில் 10,839 பேரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களுக்கு வருகை பதிவு பயோ மெட்ரிக் முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்களின் வருகை பதிவையும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்… 40,000 தாண்டிய சவரன்!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் பணியாளர்களின் வருகை பதிவானது முகப்பதிவு முறையில் பதிவு செய்ய முதற்கட்டமாக 315 இடங்களில் பயோமெட்ரிக் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தலைமை அலுவலகத்தில் 103, வட்டார அலுவலகங்களில் 3, ஒரு மண்டல அலுவலகத்திற்கு 2 என 5 மண்டல அலுவலகங்களில் 20, பகுதி அலுவலகங்களில் 47, வார்டு அலுவலகங்களில் 200, வாகன நிறுத்த இடங்களில் 20 மற்றும் இதர இடங்களுக்கு 5 என மொத்தம் 315 எண்ணிக்கையிலான பயோ மெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களிலும் பயோ மெட்ரிக் முறைக்கு 184 இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!