தமிழகத்தில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ., பணியிடங்கள் – தகுதி பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!

0
தமிழகத்தில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ., பணியிடங்கள் - தகுதி பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!
தமிழகத்தில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ., பணியிடங்கள் - தகுதி பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!
தமிழகத்தில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ., பணியிடங்கள் – தகுதி பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள 124 கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ., பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விவரங்கள் தயார் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.இ.ஓ., பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள 124 கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்தல், உரிமம் புதுப்பித்தல், நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் பணிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) நியமிக்கப்படுவர். தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி நெருங்கி வருவதால் தமிழகத்தில் காலியாக உள்ள 22 காலியிடங்களை நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளுக்கு தகுதியுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்து பட்டியல் தயார் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்களா, அல்லது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா,

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான மாதிரி தேர்வுகள் – பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடங்கும்!!

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் நடவடிக்கைகள் ஏதும் உள்ளதா, விருப்ப ஓய்வு பெற்றவரா என்பதை கண்டறிந்து பட்டியல் தயார் செய்ய வேண்டும் என கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலியிடங்களை நிரப்ப பொதுத்தேர்வுக்குள் விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!