திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 – தமிழக அரசு அறிவிப்பு!!

0
திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 - தமிழக அரசு அறிவிப்பு!!
திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 - தமிழக அரசு அறிவிப்பு!!
திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த வருடம் கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பல விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள்:

தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழின் சிறப்பை போற்றும் விதமாக தமிழக அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டு உ.வே.சா.விருது – எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் கம்பர் விருது – மருத்துவர் எச்.வி.ஹண்டே அவர்களுக்கும், திருவள்ளுவர் விருது – வைகைச் செல்வன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது – தமிழ் மகன் உசேன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி – தொல்லியல் துறை அறிவிப்பு!!

உ.வே.சா. விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும். உ.வே.சாமிநாதன் நினைவு கூறும் வகையில் இந்த விருது 2012-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் என அழைக்கப்படும் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவரது முதல் கதை 1958-ஆம் ஆண்டு வெளிவந்தது, அதன்பின் தொடர்ச்சியாக எழுதி வந்த அவர், கரிசல் வட்டாரவழக்கு அகராதி என்னும் அகராதியை உருவாக்கினார். இசையிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். நாளிதழ்களிலும் – திங்கள், வார இதழ்களிலும் புறப்பாடு, கண்ணிமை, வால் நட்சத்திரம், ஒரு வாய்மொழிக் கதை, அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை, மிருகமனிதன், விடுமுறையில் உள்ளிட்ட 81 படைப்புகளைத் தந்துள்ளார். இவருக்கு தற்போது உ.வே.சா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அங்கன்வாடிகள் திறப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், அரிய வகை நூல்கள் முதலியவற்றை தங்களது முயற்சியால் கண்டறிந்தும், வெளிக்கொணர்ந்தும் தமிழுக்கு புகழ் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் அறிஞர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!