தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – நிம்மதியில் மக்கள்!
தமிழகத்தில் தங்கம் விலை நேற்று அதிரடியாக அதிகரித்த நிலையில், இன்று (நவ. 16) குறைந்துள்ளது. அந்த வகையில் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பின் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று (நவ.15) ஒரே நாளில் தங்கம் விலையானது ரூ.30 உயர்ந்தது. அதனால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ. 5635க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – வெளியீடு!
அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 45080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் ரூ. 6105க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 48840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளி விலையானது இன்று அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 78க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 78000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.