சென்னை: 4 நாட்களுக்கு பிறகு திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

0
சென்னை: 4 நாட்களுக்கு பிறகு திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னை: 4 நாட்களுக்கு பிறகு திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னை: 4 நாட்களுக்கு பிறகு திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

அட்சய திருதியை தினத்தன்று தமிழகம் முழுவதும் 16 முதல் 18 டன் அளவுக்கு தங்க நகைகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 டன் அளவுக்கு நகைகள் விற்பனையாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தங்க விலை தொடர்ந்து உயர்ந்து மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு:

தமிழகத்தில் அட்சயதிரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் கடைகளில் நேரடி விற்பனை நடக்கவில்லை. ஆன்லைன் மூலம் குறைந்த அளவு மட்டுமே நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று இல்லாததால் பொதுமக்கள் பெருமளவில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்கினர். மேலும் அட்சயதிரிதியை அன்றும், முந்தைய நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது.

மே 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி முடிவு!

இதனால் நகைக் கடைகளில் அதிகாலை முதலே விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியது. அதை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. ஒரு கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. மேலும் 21ம் தேதி கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4817க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,696க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.784 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,823க்கும், சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.38,584க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.80க்கு விற்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!