சென்னையில் கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!

0
சென்னையில் கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் உற்சாகம்!
சென்னையில் கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் உற்சாகம்!
சென்னையில் கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தங்கத்தின் விலை:

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்க விலை உயர்ந்தும், குறைவதுமாய் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே சென்றாலும் தாய்மார்கள் நகை வாங்குவதில் மட்டும் பின்வாங்குவதே இல்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இருந்து தான் தங்கத்தின் விலை பல மடங்காக அதிகரிக்க துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்யும் முறை!

தற்போது உக்ரைனை உலுக்கி கொண்டிருக்கும் போரால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாய் இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்துமே பாதிப்படைந்து பங்குச்சந்தை நிலவரம் வரலாறு காணாத அளவுக்கு மிகவும் சரிவடைந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 37,896 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 63.70 ரூபாய்க்கு விற்பனையானது.

Exams Daily Mobile App Download

தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,824-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,737-க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ.9 குறைந்து ரூ.4,728 க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.64.20-க்கு விற்பனையாகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!