தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு – அமைச்சர் கூறிய தகவல்!!

3
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு - அமைச்சர் கூறிய தகவல்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு - அமைச்சர் கூறிய தகவல்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு – அமைச்சர் கூறிய தகவல்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கினால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பரவலை கடந்த 11 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொடக்கத்தில் கடுமையான விதிகளுடன் பின்பற்றப்பட்ட பொது முடக்கத்தில் பின்னர் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்று மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 500க்கும் கீழ் இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர்களின் பி.எப் தொகையை மத்திய அரசு செலுத்தும் – புதிய அறிவிப்பு வெளியீடு!!

மேலும் பள்ளிகளிலும் அடுத்தடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கொரோனா 2வது அலை அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பாண்டியராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இப்படியே சென்று தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2வது அலை பரவி வேகமெடுக்கத் தொடங்கினால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Better to close all schools and colleges and continue again online classes , we parents are really worried n scared to send our kids to school that too for long duration school hrs frm morning till evening. No covid protocols are being followed too . Better close the schools

  2. Indian govt. is to expedite covid-19 vaccination by permitting all aged groups of people with out any restrictions ; Govt. is to spare more vaccines for its own citizens.

  3. corona பரவி வருவது மீண்டும் கட்டுக்கடங்காமல் லட்சக் கணக்கில் பெருகுகிறது. முதலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் முழுத் தடை விதித்தால் தான் corona பரவுதலும், இறப்புக்களும் தடுக்கப்படும். அரசு இதைச்
    செய்யாவிட்டால் நிலைமை மிகவும் விபரீதமாகும். மக்கள் உயிர் பாதுகாக்கப்படுவதுதான் மிக மிக முக்கியம். தமிழகத் தேர்தலைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்.
    V.R.Saranathan, Srirangam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!