தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் – 63 லட்சம் பதிவாளர்கள்!!

3
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் - 63 லட்சம் பதிவாளர்கள்!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் - 63 லட்சம் பதிவாளர்கள்!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் – 63 லட்சம் பதிவாளர்கள்!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு துறை சார்பில் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுதாரர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 83 ஆயிரமாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வேலைவாய்ப்புகள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பலர் வேலையிழக்க வேண்டிய நிலை உருவாகியது. வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம்களை பல மாவட்டங்களில் நடத்தி வருகின்றன. அரசு வேலை பெறுவதற்கு பலர் அரசு சார்பில் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நம்பி உள்ளனர்.

தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!!

இதன்படி அரசு சார்பில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவாளர்களின் மொத்த எண்ணிக்கை 63 லட்சத்து 83 ஆயிரத்து 829 ஆக உள்ளது. இதில் 17 லட்சத்து 66 ஆயிரத்து 872 பேர் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 12 லட்சத்து 2 ஆயிரத்து 493 பேர், 19 வயது முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள், மேலும் 22 லட்சத்து 98 ஆயிரத்து 70 பேர், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் 9ம் வகுப்பிற்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் 36 வயது முதல் 57 வயது வரை உள்ள வயது முதிர்ந்த பதிவாளர்கள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 612 பேரும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 ஆயிரத்து 782 பேரும் உள்ளனர் என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Renewal date has expired.
    Most of them have to renewal it again.
    Kindly Tamil Nadu Government have to give time for them to renewal employment registration again.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!