தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் – முழு விபரம்!!

0
தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் -
தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் -
தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் – முழு விபரம்!!

தற்போது நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, பல்வேறு கட்சிகளை சேர்ந்த முதல் 20 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி களம் கண்டது.

TN Job “FB  Group” Join Now

தவிர பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதன்படி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதன்படி, தியாகராயநகர் தொகுதியில், அதிமுக கட்சியின் சத்யநாராயணனை விட 137 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக கருணாநிதி வெற்றி பெற்றார்.
  • மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சுப்புலட்சுமி ஜெகதீசனை விட, 281 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக சரஸ்வதி வெற்றி பெற்றார்.
  • தென்காசி தொகுதியில் அதிமுக செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட, 370 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸின் பழனிநாடார் வெற்றி பெற்றார்.
  • மேட்டூர் தொகுதியில் திமுகவின் சீனிவாச பெருமாளை விட, 656 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக சதாசிவம் வெற்றி பெற்றார்.
  • காட்பாடியில் அதிமுக வி.ராமுவை விட, 746 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக துரைமுருகன் வெற்றி பெற்றார்.
  • கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக செங்குட்டுவனை விட, 794 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக அசோக்குமார் வெற்றி பெற்றார்.
  • விருதாச்சலம் தொகுதியில் பாமக கார்த்திக்கேயனை விட, 862 வாக்குக்கள் கூடுதலாக பெற்று காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
  • நெய்வேலி தொகுதியில் பாமக ஜெகனை விட, 977 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக சுபா ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
  • ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுகவின் கே.சி.வீரமணியை விட, 1091 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக தேவராஜி வெற்றி பெற்றார்.
  • கிணத்துக்கடவு தொகுதியில் திமுக குறிஞ்சி பிரபாகரனை விட, 1095 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக தாமோதரன் வெற்றி பெற்றார்.
  • அந்தியூர் தொகுதியில் அதிமுக சண்முகவேலை விட, 1275 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார்.
  • திருமயம் தொகுதியில் அதிமுக பி.கே.வைரமுத்துவை விட, 1382 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக ரகுபதி வெற்றி பெற்றார்.
  • தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் எல்.முருகனை விட, 1393 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் கயல்விழி வெற்றி பெற்றார்.
  • உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சோமசுந்திரத்தை விட, 1622 வாக்குகள் அதிகமாக பெற்று திமுகவின் சுந்தர் வெற்றி பெற்றார்.
  • பொள்ளாச்சி தொகுதியில் திமுக வரதராஜனை விட, 1725 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றார்.
  • கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமல்ஹாசனை விட, 1728 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
  • கூடலூர் தொகுதியில் திமுக காசிலிங்கத்தை விட, 1945 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக பொன் ஜெயசீலன் வெற்றி பெற்றார்.
  • திருப்போரூர் தொகுதியில் பாமக ஆறுமுகத்தை விட, 1947 வாக்குகள் கூடுதலாக பெற்று விசிக பாலாஜி வெற்றி பெற்றார்.
  • ராசிபுரம் தொகுதியில் அதிமுக சரோஜாவை விட, 1952 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக மதிவேந்தன் வெற்றி பெற்றார்.
  • மயிலம் தொகுதியில் திமுக மாசிலாமணியை விட, 2230 வாக்குகள் அதிகமாக பெற்று பாமகவின் சிவக்குமார் வெற்றி பெற்றார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!