சட்டமன்ற தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் – கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. பல அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிபுரியும் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களை பற்றி சில புதிய வழிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணிகள்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் குறித்து கடந்த மாதமே கடைசி தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தேர்தல் பணிக்கான அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் மூன்று கட்ட பயிற்சி குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் பணிக்காக சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் கொரோனா பரிசோதனை மற்றும் இணை நோய்களுக்கான அறிவிப்பு ஏதும் இல்லாததால் தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதனால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் பணிக்கான வரைமுறைகள்:
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான படிவங்களில் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் துறை பெயர், அலுவலகம், முகவரி, பள்ளி, கல்லூரி, ஊழியர்களின் சம்பளம், இல்ல முகவரி, அருகில் உள்ள காவல் நிலையம், செல்போன் எண் போன்ற தகவல்கள் பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவதால் அவர்களால் வாக்களிக்க முடியாத காரணத்தால் அவர்கள் தபால் வாக்குகள் அளிக்க, வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் வாக்காளர் பட்டியல் பதிவு ஆகியவை பூர்த்தி செய்ய வேண்டும்.
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
இதற்கு முன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாக்கு இயந்திரத்தை கையாண்டதுண்டா என்பது குறித்தும், தேர்தல்களில் முறைகேடுகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் தோற்று காரணமாக கூட்ட நெரிசலை தடுக்க புதிதாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 67,687 இருந்து 95 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தேர்தல் பணிகள் நடைபெறுவதால் சட்டமன்ற தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்