தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு – வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 45 ஆயிரம் வாக்கு சாவடிகளில் கேமரா பொருத்தும் பணிக்காக பள்ளிகளை திறந்துவைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, வேட்பாளர் மனு தாக்கல் என தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 88,947 வாக்குச்சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித வாக்குச்சாவடிகளில் ‘வெப்காஸ்டிங்’ எனப்படும் நிகழ்நேர வாக்குப்பதிவு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அதிகரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள 45 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தேர்தல் நாள் அன்று கண்காணிக்கப்படும். இதற்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மார்ச் மாதம் 22, 23 ஆம் தேதிகளில் கேமரா பொறுத்த பள்ளிகளை பார்வையிட வேண்டும். மேலும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – அதிரடி அறிவிப்பு!!
மேலும் ஏப்ரல் மாதம் 3, 4 ஆம் தேதிகளில் கேமராக்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன என முதல் முறை சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளன. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிலையில் இந்த நாட்களில் பள்ளிகளை திறந்து வைத்து ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.