தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் - அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
தமிழக சட்டமன்ற தேர்தல் - அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிகபட்ச வாக்குகளுடன் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்

ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்தல் முடிவில் அதிகபட்ச வாக்குகளை பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,

  • ஆத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 1,35,571 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, பாமக வேட்பாளர் திலகபாமாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
  • திருவண்ணாமலை தொகுதியில் 94,673 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் வேலு, பாஜகவின் தணிகைவேலை தோற்கடித்துள்ளார்.
  • பூந்தமல்லி தொகுதியில் 94,110 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, பாமக வேட்பாளர் ராஜமன்னர் அவர்களை தோற்கடித்துள்ளார்.
  • எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி 93,802 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் நேரு 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு 60,922 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருக்கோயிலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொன்முடி 59, 618 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் 59,618 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் 57,071 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • தளி தொகுதி சிபிஐ வேட்பாளர் தி.ராமச்சந்திரன் 56,226 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜேஷ் குமார் 55,294 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.மணி 55,294 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.நாசர் 55,275 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிவகுமார் 55,013 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சந்திரசேகர் 54,976 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 53,797 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் 53,650 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
  • பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வாகப் 52,141 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!