தமிழக அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை – கல்வித்துறை எச்சரிக்கை!!

0
தமிழக அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழக அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழக அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை – கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் என்ஓசி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான கட்டாயக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலமாக தமிழகத்தில் புதிதாக பல தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் என்ஓசி மற்றும் அரசு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆய்வின்படி ஆலந்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அரசு அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் நடைபெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு செயல்படும் பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிர்ணயம் – ஒரு நபர் குழு அரசாணை வெளியீடு!!

நோட்டீஸ் அனுப்பப்பட்ட பள்ளிகள் அறிவிப்பை மீறி செயல்பட்டால் அந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. மேலும் மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் விஎன்ஆர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தமிழ்நாடு மாநில அரசு மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றின் அங்கீகாரம் பெறாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை எம்.டெக் பாடப்பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு – ஐகோர்ட் கேள்வி!!

இந்த பள்ளி மத்திய மனிதவள மேம்பாடு திட்டத்தின் கீழ் இயங்கும் The National Institute Of Opening Schooling, New Delhi அங்கீகாரம் பெற்ற பள்ளி என நீதிமன்றத்தில் தெரிவித்த ஆவணங்களின் படி பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றல் 14 வயதிற்குட்ப்பட்ட மாணவர்களை மட்டும் level A, Level B, Level C முறையில் மாணவர்களை இந்த பள்ளியில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!