தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் – முழு விவரம்!!

0
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் - முழு விவரம்!!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் - முழு விவரம்!!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் – முழு விவரம்!!

தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி வரை தளர்வுகளுடன் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய தளர்வுகள் படி எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இ-பதிவு:

தமிழக அரசு தற்போது மாநிலத்தில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூன் 28 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிய ஊரடங்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – முதல்வர் உத்தரவு!

அதன்படி பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளும் ஏதும் அளிக்கப்படவில்லை. பாதிப்புகள் குறைவாக காணப்படும் 23 மாவட்டங்களுக்கு சிறிய அளவில் தளர்வுகள் மற்றும் மிக குறைந்த பாதிப்புகள் காணப்படும் 4 மாவட்டங்களில் அதிக அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இ-பதிவு அவசியம் மற்றும் அவசியமற்ற மாவட்டங்கள் விவரம்:

  • சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வாடகை வாகனங்கள், டேக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி.
  • பாதிப்பு குறைவாக காணப்படும் வகை 2 மற்றும் 3ல் குறிப்பிட்டுள்ள மொத்தம் 27 மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று திருமண நிகழ்வுகளுக்கு பயணம் செய்ய அனுமதி. மேலும் இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணைய வழியாக https://eregister.tnega.org விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
  • கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.
  • வகை 2ல் வகைப்படுத்தப்பட்டிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். டேக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!