தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் செலவழிக்கப்பட்ட தொகை குறித்தும் மற்றும் மீதமுள்ள தொகையினை அரசு கணக்கில் செலுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிதிக்கட்டுப்பாடு அலுவலரின் செயல்முறையை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கான செலவு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை நலத்திட்டங்களுக்கு செலவழித்த மீதமுள்ள தொகையினை அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான செயல்முறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான முக்கிய அறிவிப்பு – FD விகிதம் உயர்வு!

இவர் தெரிவித்துள்ளதாவது, AMOUNT TO BE UTILIZED FOR LIABILITIES என்ற கலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் செலவினம்‌ மேற்கொள்ளப்படாத தொகையினை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தொகையினை உடனடியாக அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தொகை எந்த நிதியாண்டிற்காகப்‌ பெறப்பட்டது என தெரிவிக்கப்பட வேண்டும். இதனை தொடர்ந்து எந்த திட்டத்திற்காக அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு எத்தனை சதவீதம் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள தொகை மற்றும்‌ அரசுக்கணக்கில்‌ செலுத்திய தொகை ஆகியவை சேர்த்து குறிப்பிட வேண்டும். அத்துடன் அடுத்த நிதியாண்டில் செலவு செய்ய உள்ள தொகையையும் தெரிவிக்கப்பட வேண்டும். இப்படிவத்தை சரியாக பூர்த்தி செய்து நிதிக்கட்டுப்பாடு அலுவலரின் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் இதனை வருகிற செப்டம்பர் 10ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here