முழு ஊரடங்கு எதிரொலி – தமிழகத்தில் பருப்பு விலை ஏற்றம்!!

0
முழு ஊரடங்கு எதிரொலி - தமிழகத்தில் பருப்பு விலை ஏற்றம்!!
முழு ஊரடங்கு எதிரொலி - தமிழகத்தில் பருப்பு விலை ஏற்றம்!!
முழு ஊரடங்கு எதிரொலி – தமிழகத்தில் பருப்பு விலை ஏற்றம்!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பருப்பு விலை அதிகரித்துள்ளது.

பருப்பு விலை அதிகரிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

எனவே தமிழகத்தில் உள்ள மார்க்கெட்களில் பருப்பு வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உளுந்து, துவரை, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் வடமாநிலங்களில் இருந்து வரவைக்கப்படுகின்றன. ஆனால் வட மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வரத்து குறைந்துள்ளது. இதுவே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் ஆகும்.

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!

நேற்று தமிழக மார்க்கெட்டுகளில் உள்ள வியாபாரிகள் பருப்பு விலையை மூன்று ரூபாய் அதிகரித்துள்ளனர். அதன்படி, விலையேற்றம் செய்யப்பட்ட பருப்பு வகை விலை நிலவரம்,

  • முதல் ரகம் உளுந்தம் பருப்பு – பழைய விலை ரூ.120, புதிய விலை ரூ.123 ஆகும்
  • இரணடாம் ரகம் உளுந்தம் பருப்பு – பழைய விலை ரூ.115, புதிய விலை ரூ.118 ஆகும்.
  • மூன்றாம் ரகம் உளுந்தம் பருப்பு – பழைய விலை ரூ.110, புதிய விலை ரூ.113 ஆகும்.
  • பர்மா ரகம் உளுந்தம் பருப்பு – பழைய விலை ரூ.100, புதிய விலை ரூ.103
  • முதல் ரகம் துவரம்பருப்பு – பழைய விலை ரூ.112, புதிய விலை ரூ.115 ஆகும்.

தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – தலைநகரில் போராட்டம்!!

  • இரண்டாம் ரகம் துவரம் பருப்பு – பழைய விலை ரூ.105, புதிய விலை ரூ.108 ஆகும்.
  • மூன்றாம் ரகம் துவரம் பருப்பு – பழைய விலை ரூ.97, புதிய விலை ரூ100 ஆகும்.
  • முதல் ரகம் கடலை பருப்பு – பழைய விலை ரூ.82, புதிய விலை ரூ.85 ஆகும்.
  • இரண்டாம் ரகம் கடலை பருப்பு – பழைய விலை ரூ.77, புதிய விலை ரூ.80 ஆகும்.
  • மூன்றாம் ரகம் கடலை பருப்பு – பழைய விலை ரூ.75, புதிய விலை ரூ.78 ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!