தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் உள்ளவர்க்ளுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமலில் உள்ளது. நோயின் தீவிரத்தை குறைக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் இருப்பதால் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதி – அரசு உத்தரவு!!
இந்நிலையில் தமிழக மருத்துவத்துறை கொரோனா நோயாளிகளை மூன்று வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் இருப்போரை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது.
TN Job “FB
Group” Join Now
அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 94க்கு கீழ் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்கள் உட்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.