தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ரத்து – வழக்கு விசாரணை தள்ளுபடி!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ரத்து - வழக்கு விசாரணை தள்ளுபடி!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ரத்து - வழக்கு விசாரணை தள்ளுபடி!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ரத்து – வழக்கு விசாரணை தள்ளுபடி!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைக்கடன் வரை வைத்திருப்பவர்களின் கடன் தொகையானது தள்ளுபடி செய்வதாக வெளியான அரசின் உத்தரவில் முறைகேடுகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக அரசு கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அரசின் ஆணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அரசின் தள்ளுபடியை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதன் படி உள்ளவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியை தேர்வு செய்யும் ரசிகர்கள்!

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், இது குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவு பொது நலனிற்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு போன்றவற்றை அளித்து நிதி பற்றாற்குறையில் உள்ளது. ஆனால் நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மேலும், எந்த வித தொகையும் செலுத்தாதவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டுக்குடும்ப முறையை சிதைக்கும் வகையில் உள்ளதாகவும், நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன்களை விவசாயிகளும், சுய உதவி குழுக்களும் பெறுவதற்கு வருமானம் மற்றும் பொருளாதார எல்லை ஆகிய நிபந்தைகள் உள்ள நிலையில், நகைக்கடன் தள்ளுபடிக்கு இது போன்று எந்த நிபந்தனையும் இல்லை என்றும், இதனால் இந்த தள்ளுபடி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் போது மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்று சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here