தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தலைமை செயலர் அவசர ஆலோசனை!

2
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தலைமை செயலர் அவசர ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தலைமை செயலர் அவசர ஆலோசனை! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தலைமை செயலர் அவசர ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தலைமை செயலர் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தலைமை செயலர் ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அதுமட்டுமின்றி ஏப்ரல் 26 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பார்கள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் மற்றும் சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மே 2ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அரசு இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் 29 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

இதற்கிடையில் இன்று மாலை 5 மணி அளவில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. These Lockdowns, the intention is not to curb Corona but make the people suffer & distract them from the wrongs of some. Yes undeniably Covid 19 exists in a worser format now but stringent action like putting defaulters of mask, social distancing using preventive detention laws with autobail on 15th day will set right the situation make people more responsible. Instead for some idiots mistake you go on punishing business means there is something fishy.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!