தமிழக கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் – மே 5 முதல் தொடக்கம்!!
தமிழக கல்லூரிகளில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்ட அரியர் மாணவர்கள் 9 ஆயிரம் பேருக்கு மே மாதம் 5 ஆம் தேதி தேர்வு இணைய வழியில் நடைபெற உள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. கல்லூரிகளில் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கியது பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பானது எனவே அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
TN Job “FB
Group” Join Now
அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயின்ற அரியர் மாணவர்கள் சுமார் 9 ஆயிரம் பேருக்கு மே மாதம் 5 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பல்கலை நிர்வாகம் வெளியீடு!!
இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறையாமல் பரவி வருவதால் கல்லூரிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.