தமிழகத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவு – உயர் கல்வித்துறை அறிவிப்பு!!

0
தமிழகத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவு - உயர் கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவு - உயர் கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவு – உயர் கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று உயர்கல்வித்துறை சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு:

தமிழகத்தில் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படுகின்றன.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் ‘நீட்’ பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!

மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இதனை பரிசீலனை செய்த உயர்கல்வித்துறை கலை, அறிவியல், சட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து வகை பட்டப் படிப்புகளிலும் மற்ற மாணவர்களுக்கும் கல்லுாரிகளை திறக்க, உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான கருத்து தொகுப்பினை உயர்கல்வி செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் மேலும் சட்டத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை கல்வி அதிகாரிகள், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், மற்ற துறை அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழக தலைமை செயலாளர் க.சண்முகம் ஜன.29 இல் ஓய்வு – புதிய அதிகாரி விரைவில் அறிவிப்பு!!

இந்த கூட்டத்தின் முடிவில் கல்லூரிகள் திறக்கப்படும் நாள், எவ்வாறு சுழற்சி முறையில் கல்லூரிகள் திறப்பது, எந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து முடிவு இன்று எடுக்கப்படும். அதன்பின் சுகாதாரத்துறை அனுமதி பெற்று, தலைமை செயலாளர் மற்றும் முதல்வரின் அனுமதியுடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here