தமிழகத்தில் ஜூன் 7க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

4
தமிழகத்தில் ஜூன் 7க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 7க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 7க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் ஜூன் 7ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 24 வரை தினசரி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. இது ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி – அமைச்சர் விளக்கம்!

இந்த ஊரடங்கில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் போன்றவை அவரவர் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கப்படுகிறது. இதன் விளைவாக நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. தினசரி 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 25 ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை. மேலும் சென்னையில் குறைந்துள்ள கொரோனா பாதிப்பு, கோவையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதல்வர் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட வீடியோ பதிவில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். தற்போது கொரோனா பரவலும் குறையத் தொடங்கி உள்ளதால், முழு ஊரடங்கில் ஜூன் 7க்கு பின்னர் தளர்வுகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் படிப்படியாக ஊரடங்கை தளர்த்துமாறு மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமின்றி பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியமா? உங்கள் கருத்து என்ன!

இந்நிலையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது புதிய தளர்வுகள் வழங்குவது குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் முடிவில் முழு ஊரடங்கை நீட்டித்து தளர்வுகள் அளிப்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Lock down is one of the ways to control covid but it’s not the only way to eradicate an issue. So, Leave some relaxation from lockdown.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!