தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து சமூக பாதுகாப்புத் துறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியிடங்கள்:

சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 இன் விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக் குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது அதிகாரபூர்வமாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்வரும் தகுதிகள் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து சமூக பாதுகாப்புத் துறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலக் குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

தகுதிகள்:

குழந்தைகள் நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப் பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது நலன்புரி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். ஏழு வருடங்கள் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய சுயவிபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்தில்‌ அனைத்து சான்றுகளின்‌ நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட தொகுதி அளவிலான அலுவலர் கட்டிடம்-II, ஆட்சியர் வளாகம், தேனி-625531 என்ற முகவரிக்கு நவம்பர் 26ம் தேதியான நாளைக்கும் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அதற்கு பின்னர் பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here