தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் – பட்ஜெட் 2022-2023 ! முழு விபரம் இதோ!

0
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் - பட்ஜெட் 2022-2023 ! முழு விபரம் இதோ!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் - பட்ஜெட் 2022-2023 ! முழு விபரம் இதோ!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் – பட்ஜெட் 2022-2023 ! முழு விபரம் இதோ!

அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி 2022-2023 நிதியாண்டில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள், இலவச சைக்கிள் மற்றும் பல திட்டங்களை அமல்படுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்:

அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு ஆண்டுதோறும் பல நன்மைகளை செய்து வருகிறது. அதாவது இலவச சைக்கிள், லேப்டாப், புத்தகப் பை, பேருந்துப் பயண அட்டை, வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி உதவி, இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் பல நன்மைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்தாண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிதாக பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 19) மின்தடை ஏற்பட உள்ள முக்கிய பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் (2022 – 2023) நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்களை சேர ஊக்குவிப்பதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்களை சேர ஊக்குவிப்பதற்காக இளநிலை படிப்புகளுக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் புதிய திட்டம் மூலமாக 18,000 வகுப்பறைகள் கட்ட இருப்பதாகவும், பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி மற்றும் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!