தமிழகத்தில் குறைந்த விலையில் பெரிய வெங்காய – அரசின் அசத்தலான நடவடிக்கை!
தமிழகத்தில் செய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் கூட்டுறவு பசுமை காய்கறி கடைகளில் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து வெகுவாக சரிந்துள்ளது. தற்போது காய்கறிகளுக்கு பற்றாக்குறை நிலவும் வேளையில் அதன் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 கடந்து விற்பனையாகி வருகிறது. எப்போதும் பெரிய வெங்காயத்தின் விலை குறைவாகவே விற்கப்படும். தற்போது வரத்து குறைவினால் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனையாகி வருகிறது.
சிலிண்டர் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி ஈஸியா புக் பண்ணுங்க!
இந்த நிலையில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கூட்டுறவு பசுமை காய்கறி கடைகளில் பெரிய வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெளி சந்தையில் கிலோ ரூ.70 விற்கப்படும் பெரிய வெங்காயத்தை கூட்டுறவு பசுவை காய்கறி கடைகளில் கிலோ ரூ.30- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ‘நாபெட்’ எனும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பில் இருந்து அரசு கிலோ ரூ.25க்கு வெங்காயத்தை கொள்முதல் செய்து வருகிறது.