சுதந்திர தின விழா சிறப்பு விருதுகள் 2021 முழு விபரம் – முதல்வர் முக ஸ்டாலின் கௌரவம்!

0
சுதந்திர தின விழா சிறப்பு விருதுகள் 2021 முழு விபரம் - முதல்வர் முக ஸ்டாலின் கௌரவம்! 
சுதந்திர தின விழா சிறப்பு விருதுகள் 2021 முழு விபரம் - முதல்வர் முக ஸ்டாலின் கௌரவம்! 
சுதந்திர தின விழா சிறப்பு விருதுகள் 2021 முழு விபரம் – முதல்வர் முக ஸ்டாலின் கௌரவம்! 

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் முக ஸ்டாலின் கௌரவித்து வருகிறார். அந்த வகையில் விருதுகள் பெற்ற சாதனையாளர்களது விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விருதுகள் வழங்கல்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளார். இதற்கு முன்னதாக இன்று (ஆகஸ்ட் 15) காலை முதல்வர் முக ஸ்டாலின், சென்னை கோட்டையில் கொடியேற்றிய பிறகு, தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தியாவில் ரூ.100 லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை!

அதன் பின்னர், தேசிய கொடியை ஏற்றுவதற்கு வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றியுரை கூறினார். இதை தொடர்ந்து விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கினார். இவ்விருதினை அவரது கணவர் சண்முக பெருமாள் என்பவர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசியர் லட்சுமணன் அவர்களுக்கு, அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – துறைத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!

மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கான சிறந்த விருது திருநங்கை கிரேஸ் பானு அவர்களுக்கும், சமூக சேவையில் சிறந்த பங்களிப்பை அளித்த டாக்டர் சாந்தி துரைசாமி அவர்களுக்கு ஔவையார் விருதும், சென்னை மாநில கல்லூரி முதல்வர், நில நிர்வாக ஆணையர் ஜெ.பார்த்திபன் உட்பட 3 பேருக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல சேவையில் தொண்டாற்றிய திருச்சி ஹோலி கிராஸ் தொண்டு நிறுவனத்துக்கு சிறந்த சேவை மற்றும் மருத்துவர் பத்மபிரியாவுக்கு சிறந்த மருத்துவர் விருதும் வழங்கப்பட்டது.

‘பாரதி கண்ணம்மா’ பரினா வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

தவிர திருநெல்வேலியை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி என்பவருக்கு சிறந்த சமூக பணியாளர் விருதும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை, சாயல்குடி அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனை நிர்வாகங்களுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளை உதகை, திருச்செங்கோடு, சின்னமனுர் ஆகிய இடங்கள் பெற்றது. தஞ்சாவூருக்கு சிறந்த மாநகராட்சி விருது அளிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!