தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் – முதன்மை கல்வி அலுவலர் தகவல்!!

0
தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் - முதன்மை கல்வி அலுவலர் தகவல்!!
தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் - முதன்மை கல்வி அலுவலர் தகவல்!!
தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் – முதன்மை கல்வி அலுவலர் தகவல்!!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், போதிய வகுப்பறை இல்லாத பள்ளிகள் மாற்று நாட்களில் வகுப்புகளை எடுக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர்:

கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களை பொதுத்தேர்விற்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் 9, 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

பாரதிதாசன் பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் – கவர்னர் உத்தரவு!!

தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் மட்டுமே இடைவெளி விட்டு அமர வைக்கப்பட வேண்டும். 9, 10, 11, 12 என நான்கு வகுப்புகளுக்கும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் வகுப்பறைகள் அதிகளவில் தேவைப்படும். இதனால் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எனவே போதிய வகுப்பறைகள் இல்லாத பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களை வாரத்தின் மாற்று நாட்களில் பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகளை எடுக்கலாம் என மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

IGNOU பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்வு!!

அதுமட்டுமின்றி ஆசிரியர்களுக்கு ஷிப்ட் முறையில் பாடங்களை எடுக்க அனுமதிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் என்பதால், மாற்று நாட்களில் வகுப்புகளை நடத்துவது சரியாக வராது என தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!