தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் இன்று (நவ.14) தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அது மேலும் வலுவடையும் என்பதால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதே போல தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தொழிலாளர் வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்களுக்கு மீட்பு இயக்கம் – வெளியான அறிவிப்பு!
அது மட்டுமில்லாமல் 14 மாவட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.