தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – எச்சரிக்கை மக்களே!

0
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - எச்சரிக்கை மக்களே!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - எச்சரிக்கை மக்களே!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – எச்சரிக்கை மக்களே!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக டிச.2 மற்றும் டிச.3 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலா சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வருகிறது.

கூட்டுறவுத்துறையில் எழுத்தர் & சுருக்கெழுத்து பணியிடம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதன் பின் அது புயலாக மாறும். அதனால் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!