தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் – புதிய அறிவிப்பு!

3
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் - புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் - புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் – புதிய அறிவிப்பு!

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தி அவர்களை பொதுத்தேர்விற்கு தயார்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.

தினசரி தேர்வு :

கடந்த வருட கொரோனா பரவலில் இருந்தே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படவே இல்லை. பிறகு மேல் வகுப்பிற்கு மட்டும் கால தாமதமாக திறக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற்றது. பொதுத்தேர்வு மே 5ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் பரவலால் பள்ளிகளுக்கு மீன்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்விற்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் இணையம் வழியாக பாடம் கற்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களின் மூலம் பாடங்கள், முக்கிய வினாக்கள் ஆசிரியர்களின் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் அனுப்பப்படும் அதை ஆசிரியர்களும் தினமும் மாணவர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பி அதை மாணவர்கள் படிக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு தகவல்!

இதை தொடர்ந்து முக்கிய வினாக்கள், விடைகளை மாணவர்களுக்கு பாட வாரியாக தினமும் சொல்ல வேண்டும் மேலும் அதை தேர்வாக நடத்த வேண்டும். தினமும் ஆசியர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு வரும் பாடங்களை மாணவர்களுக்கு விளக்கி தேர்வுகள் நடத்தி அந்த மதிப்பெண் விவரங்களை தினமும் அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்விற்கு சிறப்பாக தயாராவார்கள். மேலும் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆசியர்கள் கவனமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

elaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!