தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் எப்போது பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் வழியாக சரியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த முடியாத காரணத்தினால் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு 35 சதவீதம் வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் எந்தவித பயமுமின்றி தெளிவாக தேர்வு எழுதினர். அதேநேரத்தில் இந்த ஆண்டு அனைத்து பொதுத்தேர்வு வினாக்களும் எளிமையாகவே கேட்கப்பட்டது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர் கொண்டதால் தேர்வு முடிவை எண்ணி நடுங்கி கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரே தேதியில் அதாவது ஜூன் 20ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நண்பகல் 12:00 மணிக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆதாருடன் வாக்காளர் பட்டியல் இணைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in இந்த முகவரி பக்கத்திற்கு சென்று உங்களுக்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் காலை 9. 45 மணி முதல் மதியம் 11. 45 மணி வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை 12:15 முதல் பிற்பகல் 2. 15 மணி வரையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்டுள்ள மணி நேரத்திற்குள் பதிவிறக்கம் செய்யாத பள்ளி மாணவர்கள் பிற்பகல் 3 மணி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TN 12th Result 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here