தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. பாடவாரியான அட்டவணை – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. பாடவாரியான அட்டவணை - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. பாடவாரியான அட்டவணை - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. பாடவாரியான அட்டவணை – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பின் 2022-23 ஆம் கல்வியாண்டு திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். தேர்வு அட்டவணை குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுத்தேர்வு அட்டவணை:

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் 2022-23 கல்வியாண்டு வழக்கம் போல ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்து வகுப்புகளும் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் இன்னும் 5 மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அதனால் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர் 7) வெளியிட்டார். அதன் படி 2023 ஆம் ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் தொடக்கப்படும். மேலும், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற இருப்பதாகவும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 10ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும் தற்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் பாட வாரியாக தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அதன் படி,

பள்ளிகள் மீண்டும் திறப்பு.. கட்டுப்பாடுகள் தளர்வு – இயல்பு நிலையை நோக்கி திரும்பும் தேசிய தலைநகரம்!

Exams Daily Mobile App Download
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
  • ஏப்ரல் 6 – மொழித்தாள்
  • ஏப்ரல் 10 – ஆங்கிலம்
  • ஏப்ரல் 13- கணிதம்
  • ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
  • ஏப்ரல் 17- அறிவியல்
  • ஏப்ரல் 20- சமூக அறிவியல்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
  • மார்ச் 13 – மொழித்தாள்
  • மார்ச் 15- ஆங்கிலம்
  • மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
  • மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம்
  • மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், நர்சிங்
  • மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
  • ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!