TNPSC பொது தமிழ் – உரைநடை விளக்கம்

2

உரைநடை விளக்கம்

பழங்காலத்தில் தனி உரைநடை நூல்கள் இல்லை என்றாலும் செய்யுளும் உரைநடையும் கலந்த நூல்கள் இருந்தன. இருந்தாலும் இலக்கியம், இலக்கணம், சோதிடம், மருத்துவம் நிகண்டு ஆகிய அனைத்துமே செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டு வந்தன. செய்யுளும், உரைநடையும் கலந்து இயற்றிய நூல்களுக்கு ‘உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று குறித்தனர். பெருந்தேவனாரின் பாரதம், தகடூர் யாத்திரை சிலப்பதிகாரம் போன்றவை ஆகும்.

 • தொல்காப்பியர் உரைநடையை நான்கு வகைகளாக வகைபடுத்தியுள்ளார்.
  1. பாட்டிடை வைத்த குறிப்பு
  2. பாவின்று எழுந்த கிளவி
  3. பொருள் மரபில்லாப் பொய்மொழி
  4. பொருளோடு புணர்ந்த நகைமொழி
 • தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூல் ‘இறையனார் களவியல் உரை’ ஆகும்.
 • இது கடினமான நடையில் அமைந்திருந்தது. எனவே நக்கீரர் எளிய தொரு உரையை எழுதினார்.
 • வடமொழியும், தமிழும் கலந்த உரைநடை “மணிப்பிரவாள நடை” என்று பெயர்.
 • இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையார். அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலானோர் உரைநடைத் தோற்றத்திற்கு வித்திட்டவர்கள்.
 • ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய அச்சுப் பொறியால் தமிழில் உரைநடை நூல்கள் தோன்றி அச்சிடப்பட்டன.
 • இந்திய மொழிகளுள் முதன் முதலில் உரைநடை வடிவம் தமிழ் மொழியில் தான் தோன்றியது.
 • தமிழில் அச்சான முதல் உரைநடை நூல் கி.பி. 1577 இல் வெளியான ‘கிறிஸ்துவ உபதேசம்’ என்கிறார் கால்டுவெல். ஆனால் 1579 இல் வெளியான ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல் தான் என்று தனிநாயகம் அடிகளார் கூறுகின்றார்.
 • தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர் ஆவார். இவர் தமிழில் சொல்லிற்குச் சொல் இடைவெளி விட்டு எழுதும் முறையைப் புகுத்தி எளிமையும், புதுமையும் கொண்டதாக மாற்றினார்.
 • 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் புலவர்களுள் பலர் உரைநடை நூல்களை எழுதினார். இவர்களுள் இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

உரைநடை- மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க. வையாபுரிப் பிள்ளை மொழி நடை தொடர்பான செய்திகள்.

மறைமலை அடிகள்

 • இயற்பெயர் : வேதாசலம்
 • பெற்றோர் : சொக்கநாதர் (இவர் நாகையில் அறுவை மருத்துவர்)
 • தாயார் – சின்னம்மையார்
 • புனைப்பெயர் : முருகவேல்
 • காலம் : 15.07.1876 – 15.09.1950

பணிகள்

 • சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்
 • தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
 • 1905 சைவ சித்தாந்த சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
 • பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1911-ல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் அதனை ‘பொதுநிலைக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
 • திருமுருகன் அச்சுக் கூடத்தை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டார்.
 • ‘மணி மொழி நூல் நிலையம்’ என்ற நூலகத்தை ஏற்படுத்தினார்.
 • திருநெல்வேலி சைவ சித்தாந்தம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார்.
 • ‘ஞான சேகரம்’ என்ற இதழை நடத்தினார்.
 • ‘டிஸ்டிக் மைனர்’, ‘தி ஓரியண்டல் விஸ்டம்’ என்ற ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.
 • 1867-ம் ஆண்டு ஆ. நல்லசாமிப் பிள்ளை என்பவர் தொடங்கிய ‘சித்தாந்த தீபிகை’ என்ற தமிழ் ஆங்கில மொழிகளுக்கான இரண்டு இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவரது படைப்புகள்

1. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
2. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
3. மக்கள் நூற்றாண்டு ஊர்வாழ்க்கை இரு தொகுதிகள் (1933)
4. யோக நித்திரை : அறிதுயில் (1922)
5. தொலைவில் உணர்தல் (1935)
6. மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
7. சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்ந்தது (1907)
8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
9. ஞான சாகரம் மாதிகை (1902)

பரிதிமாற் கலைஞர்

 • பரிதிமாற் கலைஞர் : வி.கே. சூரிய நாராயண சாஸ்திரியார்
 • பிறந்த இடம் : விளாச்சேரி (மதுரை)
 • காலம் : 06.07.1870 – 02.11.1903
 • பெற்றோர் : கோவிந்த சிவன் – இலட்சுமி அம்மாள்

இளமைக் காலம் மற்றும் பணிகள்

 • 19 ஆம் நூற்றாண்டில் தமிழிற்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்
  இவர் தனது இயற்பெயரான சூரிய நாராயண சாஸ்திரி என்பதனை ‘பரிதிமாற் கலைஞர்’ எனத் தமிழாக மாற்றினார்.
 • பசுமலையில் பள்ளியில் இளமைப் படிப்பும், மதுரைக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியும் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை வகுப்பும் படித்தார்.
 • 1892 இல் பி.ஏ. தேர்வில் தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக் கழக முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
 • 1893 இல் கிறித்தவக் கல்லூரி நிர்வாகம் அவருக்குத் தத்துவத்துறை பேராசிரியர் பதவி தந்தது. அதனை ஏற்க மறுத்து தமிழாசிரியர் பதவி ஏற்றார். 1895ல் தமிழ்த்துறைத் தலைவரானார்.
 • ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்த போது அதனை மறுத்து விட்டார்.

படைப்புகள்

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 இலட்சம் பரிசுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்டன.

நூல்கள்

1. மானவிஜயம்
2. தனிப்பாசுரத் தொகை
3. பாவலர் விருந்து
4. மதிவாணன்
5. நாடகவியல் (நாடக இலக்கண நூல்)
6. தமிழ் வியாசங்கள்
7. தமிழ் மொழியின் வரலாறு
8. சித்திரகவி விளக்கம்

பதிப்பித்த நூல்கள்

1. செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச் சுருக்கம் (1898)
3. புகழேந்திப் புலவரின் நளவெண்பா (1899)
4. உத்திர கோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5. தனிப்பாசுரத் தொகை (1901)

இயற்றிய நாடக நூல்கள்

1. ரூபாவதி
2. கலாவதி
3. மானவிஜயம் (இது களவழி நாற்பது என்ற நூலைப் பின்பற்றி கணைக்கால் இரும்பொறையின் வரலாற்றைக் கூறுவது)
4. சூர்ப்பனகை – புராண நாடகமாகும்.
5. பரிதிமாற் கலைஞர் ‘முத்ராராட்சசம்’ என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

ந.மு. வேங்கடசாமி நாட்டார்
(நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கட சாமி நாட்டார்)

 • இயற்பெயர் : சிவப்பிரகாசம்
 • பெற்றோர் : முத்துச்சாமி நாட்டார் – தைலம்மை
 • காலம் : 12.04.1884 – 1944
 • பிறந்த ஊர் : நடுக்காவேரி, தஞ்சாவூர் மாவட்டம்

கல்வி

 • திண்ணைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற பின் சட்டம் பயின்றார்.
 • மதுரைத் தமிழ்ச்சங்கம் அக்காலத்தில் ‘பிரவேச பண்டிதம்’, ‘பால பண்டிதம்’, ‘பண்டிதம்’ என்னும் மூன்று தேர்வுகளை நடத்தி வந்தது. ஆறு ஆண்டுகள் படித்து தேர்வு எழுத வேண்டிய அம்மூன்று தேர்வுகளையும் ந.மு. வேங்கடசாமி நாட்டார் மூன்றே ஆண்டுகளில் அதாவது 1905, 06, 07 ஆண்டுகளில் எழுதி தேர்ச்சி பெற்றார்.
 • இத்தேர்வுகளுக்குப் பிறகு ‘பண்டிதர்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
 • 1940இல் சென்னை மாகாணத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நாட்டாருக்கு ‘நாவலர்’ என்ற சிறப்பு பட்டம் அளிக்கப்பட்டது.

படைப்புகள்

1. கபிலர்
2. கண்ணகி வரலாறு
3. சோழர் சரித்திரம்
4. நக்கீரர்
5. வேளிர் வரலாறு
6. கள்ளர் சரித்திரம்
7. கற்பும் மாண்பும்
8. கட்டுரைத் திரட்டு

உரைநூல்கள்

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, வெற்றி வேற்கைஈ மூதுரை, நல்வழி நன்னெறி, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடற் புராணம், யாப்பெருங்காலக்காரிகை, தண்டியலங்காரம், அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகிய நூல்களுக்கு உரை எழுதி ‘உரை வேந்தர்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

மறைவு

 • 1944 இல் ந.மு.வே நாட்டாருக்கு மணிவிழா கொண்டாடுவதென செயற்குழுவினர் முற்பட்ட போது எதிர்பாராத நிலையில் இவர் திடீரென காலமானர்.
 • இவருக்கு சமாதி வைக்கப்பட்ட இடத்தில் ஒரு கற்கோயில் எழுப்பப்பட்டது. தமிழ்ப் புலவர் ஒருவர் மறைந்த இடத்தில் கற்கோயில் எழுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
 • இவருக்கு தமிழகம் முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன.
 • இவரது நூற்றாண்டு விழாவை 22.04.1984 இல் தமிழக அரசு தஞ்சையில் கொண்டாடியது.

ரா.பி.சேதுப்பிள்ளை
(ராசவல்லிபுரம் பிறவிப் பெருமாள் சேதுப்பிள்ளை)

 • பெயர் : இரா.பி. சேதுப்பிள்ளை
 • பெற்றோர் : பிறவிப் பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்
 • ஊர் : இராசவல்லிபுரம், திருநெல்வேலி
 • காலம் : 02.03.1896 – 1961

பணிகள்

நெல்லையில் சில ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்பு சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

படைப்புகள்

தமிழ் மொழியில் செந்தமிழ் நடையில் அமைந்த இருபது நூல்களை எழுதி தமிழன்னைக்கு வளங்கூட்டியவர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்

வரலாற்று நூல்கள்

 • தமிழ் நாட்டு நவமணிகள்
 • கால்டுவெல் ஐயர் சரிதம்
 • கிறித்தவத் தமிழ்த் தொண்டர்
 • திருக்காவலூர்க் கலம்பகம்

ஆய்வு நூல்கள்

 • திருவள்ளுவ நூல் நயம்
 • சிலப்பதிகார நூல் நயம்
 • வீரமாநகர்
 • தமிழ் விருந்து
 • தமிழகம் ஊரும் பேரும்
 • தமிழின்பம் (சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
 • தமிழர் வீரம்
 • வழிவழி வள்ளுவர்
 • தமிழகம் அலையும் கலையும்

தொகுப்புக் கட்டுரை நூல்கள்

 • ஆற்றங்கரையினிலே
 • கடற்கரையினிலே
 • வேலும் வில்லும்
 • வேலின் வெற்றி
 • சிலம்பின் கதை அமைப்பு
 • தமிழகப் பெண்மணிகள்

திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலனார் கலியாண சுந்தரனார்)

 • பெயர் : திரு.வி.கலியாண சுந்தரம்
 • பெற்றோர் : விருத்தாசலனார் – சின்னம்மையார்
 • பிறந்த ஊர் : துள்ளம் காஞ்சிபுரம் மாவட்டம்
  (இவ்வூர் தற்போது ‘தண்டலம்’ என அழைக்கப்படுகிறது)
 • காலம் : 1833 – 1953

நூல்கள்

செய்யுள் நூல்கள்

உரிமை வேட்கை, முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், சிவன் அருள் வேட்டல், கிறித்துவின் அருள் வேட்டல், புதுமை வேட்டல், பொதுமை வேட்டல், அருகன் அருகே, கிறிஸ்து மொழிக்குறள், இருளில் ஒளி, இருமையும், ஒருமையும், முதுமை ஊறல்.

கட்டுரை நூல்கள்

1. இந்தியாவும் விடுதலையும்
2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
3. முருகன் அல்லது அழகு
4. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை நலம்
5. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
6. சைவத்திறவு
7. சைவத்தின் சமரசம்
8. கடவுட் காட்சியும் தாயுமானவரும்
9. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
10. தமிழ் நூல்களில் பௌத்தம்
11. தமிழ் நாடும் நம்மாழ்வாரும்
12. நாயன்மார்கள்
13. தமிழ்ச் சோலை
14. உள்ளொளி

குறிப்புகள்

 • திரு.வி.க பயணம் என்பதற்கு செலவு என்ற சொல்லைப் பயன்படுத்தி முதன் முதலாக வழக்கிற்குக் கொண்டுவந்தவர்.
 • திரு.வி.க வின் வாரிசுகள் என மு.வரதராசனாரும் கல்கி. ரா. கிருணமூர்த்தியும் பாராட்டப்படுகின்றனர்.
 • திரு.வி.க. வின் சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் ‘தமிழ்த்தென்றல்’.
 • திரு.வி.க.வின் பத்திரிக்கைத் தலையங்கத் தொகுப்பு நூல் ‘தமிழ் சோலை’
 • திரு.வி.க. வின் மேடைச் சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் ‘மேடைத் தமிழ்’
 • திரு.வி.க.வின் ‘பொதுமை வேட்டல்’ என்ற நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை நானூற்று முப்பது.

வையாபுரிப் பிள்ளை

 • பெயர் : வையாபுரிப் பிள்ளை
 • பெற்றோர் : சரவணப் பெருமாள் பிள்ளை – பாப்பம்மாள்
 • பிறந்த நாள் : 12.10.1891 – 1956
 • ஊர் : சிக்கநரசையன், திருநெல்வேலி மாவட்டம்

கல்வி

கணபதி ஆசிரியரிடம் திண்ணைப் பள்ளிக் கல்வி, மீனாட்சிபுரத்தில் தொடக்க நிலைக் கல்வி, ம.தி.தா. இந்து பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு,  பின் அங்கே பட்டமும் பெற்றார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வரலாறு, பொருளாதாரம் பாடமாகக் கொண்டு பி.ஏ. பட்டம் பெற்றார். 1914 இல் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார்.

பணிகள்

 • திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
 • இவர் ‘செந்தமிழ்’ இதழில் பல கட்டுரைகள் எழுதினார்.
 • இரண்டாவது முறையாக ‘மனோன்மணியம்’ என்னும் நூலை வெளியிட்டார்.
 • ‘கம்பர் கழகம்’ என்ற ஒரு அமைப்பை அமைத்து இலக்கியத் தொண்டாற்றினார்.
 • சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக 1936 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
 • சென்னைப் பல்கலைக் கழகத்தில் அகராதி தயாரிக்கும் பணியை ஏற்றுக் கொண்டு ஐந்து தொகுதிகளை வெளியிட்டார்.
 • தமிழக அரசு இருவருக்கு ‘இராவ் சாகிப்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
 • 1946 இல் கீழ்க்கலை மாநாட்டில் திராவிட மொழிக்கு தலைமை தாங்கி ஆராய்ச்சித் துறையின் வகையும் வளர்ச்சியும் பற்றி ‘திரவிட மொழிகளில் ஆராய்ச்சி’ என்னும் ஆங்கிலப் பேருரை நிகழ்த்தினார்.
 • தமிழ் மொழி மட்டுமின்றி ஆங்கிலம், வடமொழி, மலையாளம், பிரெஞ்சு,ஜெர்மன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதனால் பிறமொழி இலக்கிய
 • வளர்ச்சியினையும், காவியங்களையும் பற்றிய புத்தகங்களை எழுதினார்.
 • தமிழ் இலக்கிய சரிதத்தை முற்சங்க காலம், தொகை செய்காலம், பிற்சங்க காலம், பக்திநூற் காலம், நீதி நூற்காலம், முற்காவியம், பிற்காவியம், தற்காலம் எனப் பகுத்துக் கூறியவர் இவரே.
 • வையாபுரியார் ஆய்வுத்துறையின் முன்னோடி ‘அன்னைத்தமிழ் அரும் பணியாளர்’ என்று பாராட்டப்பட்டவர்.
 • இவர் தம் நூலகத்தில் 5000 புத்தகங்கள் அறிவுக் கரு நூல்களாக இருந்தன. அவை அனைத்தையும் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு வழங்கினார்.
 • 1951-54 வரை திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணி புரிந்தார்.

இயற்றிய நூல்கள்

1. கம்பன் காவியம்
2. இலக்கிய தீபம்
3. இலக்கிய உதயம்
4. இலக்கிய சிந்தனைகள்
5. சொற்கலை விருந்து
6. காவிய காலம்
7. தமிழ்ச் சுடர்மணிகள்
8. தமிழர் பண்பாடு
9. இலக்கணச் சிந்தனைகள்
10. உலக இலக்கியங்கள்
11. மாணிக்க வாசகர் காலம்
12. பத்துப் பாட்டின் காலநிலை
13. பவணந்தி காலம்
14. வள்ளுவர் காலம்
15. அகராதி நினைவுகள்
16. இலக்கிய மண்டபக் கட்டுரைகள்

கவிதை நூல்கள்

1. என் செல்வங்கள்
2. என் செய்வேன்
3. மெலிவு ஏன்
4. விளையுமிடம்
5. என்ன வாழ்க்கை
6. பிரிவு
7. தமிழ்ச் சுடர்மணிகள்
8. தமிழர் பண்பாடு
9. இலக்கணச் சிந்தனைகள்
10. உலக இலக்கியங்கள்
11. மாணிக்க வாசகர் காலம்
12. பத்துப் பாட்டின் காலநிலை
13. பவணந்தி காலம்
14. வள்ளுவர் காலம்
15. அகராதி நினைவுகள்
16. இலக்கிய மண்டபக் கட்டுரைகள்

கவிதை நூல்கள்

1. என் செல்வங்கள்
2. என் செய்வேன்
3. மெலிவு ஏன்
4. விளையுமிடம்
5. என்ன வாழ்க்கை
6. பிரிவு
7. என்ன உறவு

பதிப்பித்த நூல்கள்

1. திருமந்திரம்
2. கம்பராமாயணயம்
3. பால காண்டம்
4. யுத்த காண்டம்
5. நாமதீப நிகண்டு
6. அரும்பொருள் விளக்க நிகண்டு
7. தொல்காப்பியம் இளம்பூரணர் உரை
8. நச்சினார்க்கினியர் உரை
9. களவியற்காரிகை
10. தினகர வெண்பா
11. பூகோள விலாசம்
12. புறத்திரட்டு
13. எட்டுத்தொகை
14. பத்துப்பாட்டு
15. சீவக சிந்தாமணி
16. சிறுபஞ்ச மூலம்
17. நான்மணிக்கடிகை
18. திரிகடுகம்
19. இன்னா நாற்பது
20. இனியவை நாற்பது
21. பழமொழி
22. திவ்ய பிரபந்தம்
23. சீறாப்புராணம்
24. நவநீதப் பாட்டியல்
25. நெல்விடு தூது
26. இராசராசத் தேவர் உலா
27. தெய்வச்சிலையார்
28. விறலிவிடு தூது முதலிய நூல்கள் ஆகும். நிறைவாக 17.02.1957 அன்று இயற்கை எய்தினார்.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!