TNPSC பொது தமிழ் – தமிழில் சிறுகதைகள்

0
தமிழில் சிறுகதைகள்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழில் சிறுகதைகள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

சிறுகதை இலக்கணம்:

 • ஒரே மூச்சில் படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
 • படிப்போரை ஈர்க்கும் விதமாக சொற்கள் இருக்க வேண்டும்.
 • வருணனை உரையாடல் சுருக்கமாக இருக்க வேண்டும்.
 • ஒரே கருத்து நிலை நாட்ட வேண்டும்.
 • மனப்போராட்டம், சிக்கல்,பண்பு மூன்றில் ஒன்றை மட்டும் விளக்குவதாக இருக்க வேண்டும்.
 • படிப்போர் உள்ளம் நம்பத் தகுந்ததாக இருக்க வேண்டும்.
 • கண் முன் நடப்பது போல் இருக்க வேண்டும்.
 • புதினம், குறும்புதினம் இவற்றைவிட சிறியதாக இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கண, இலக்கியத்தில் சிறுகதைக் குறிப்புகள்:

 • முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்
  – “பொருளோடு புணர்ந்த புணர்மொழி”
  – நூற்பா அடிகள் சிறுகதை பற்றி குறிப்பிடுவதாகும்.
 • சங்க இலக்கியத்தில் சிறுகதைகள் “கிளைக் கதைகளாக” விரவிக் காணப்படுகின்றன.
 • சிறுகதைகள் “கிளைக் கதைகள்” என்ற பொருளில் காப்பியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.

சிறுகதையின் தொன்மை:

 • தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்திற்கு முன்பாகவே மக்களால் வாய்மொழியாகவும் செவி வழிச் செய்திகளாகவும் பேசப்பட்டு வந்தன. தான் கற்றுக் கொண்ட அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். காலத்திற்கு ஏற்ப கதாப்பாத்திரங்கள் மாறிவிடும். ஆனால் கரு(மையக் கருத்து) மாறாது. அதனால் தான் சிறுகதைகள் மக்கள் மத்தியில் மதிப்பு பெற்று நிற்கிறது.
 • இதுவே எதிர்காலத்தில் ஆங்கிலேயர் தொடர்பாலும், சுதந்திரம் பெற்றதாலும் இது ஒரு இலக்கியமாக வடிவம் பெற்றது.
 • தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு ‘களம்’ அமைத்துக் கொடுத்தது ‘மணிக்கொடி’ என்ற சிற்றிதழ் ஆகும். இது டி.எஸ்.சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதி வெளியிட்டனர்.

சிறுகதை முதன்மைகள்:

 • முதலில் சிறுகதை இலக்கியமாக தோன்றிய நாடு அமெரிக்கா.
 • உலகின் முதல் சிறுகதை “ரிப் வான் விங்க்லே” இதன் ஆசிரியர் இர்லிங். இடம் : வாசிங்டன்
 • உலகின் முதல் சிறுகதைத் தொகுதி “த ஸ்கெட்ச் புக்” ஆண்டு 1819.
 • சிறுகதை உலகின் தந்தை செகாவ்
 • சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளம்
 • உலகச் சிறுகதை முன்னோடிகள் ஆலன்போ, கோகல்.

தமிழில் சிறுகதை முன்னோடிகள்:

 • தமிழில் முதல் சிறுகதை “குளத்தங்கரை அரசமரம்” (ஆசிரியர் : வ.வே. சுப்ரமணிய ஐயர்)
 • முதல் சிறுகதைத் தொகுதி “மங்கையர்க்கரசியின் காதல்” (ஆசிரியர் : வ.வே.சு. ஐயர்)
 • சிறுகதையின் தந்தை “வரகனேரி வேங்கட சுப்ரமணிய ஐயர்”.
 • சிறுகதை மன்னன் “புதுமைப்பித்தன்”
 • தமிழ்நாட்டு மாப்பசான் புதுமைப்பித்தன் (சொ.விருத்தாச்சலம்)
 • தமிழ்ச்சிறுகதை முன்னோடி “வீரமா முனிவர்”
 • சிறுகதையின் திருமூலர் மௌனி (சுப்ரமணியம்), ந.பிச்சமூர்த்தி என்றும் கூறுவர்.
 • தமிழ்நாட்டின் “வால்டர் ஸ்காட்” கல்கி (இரா.கிருஷ்ணமூர்த்தி).
 • இவர் திரு.வி.கலியாண சுந்தரத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் ‘கல்கி’ என மாற்றிக் கொண்டார்.
 • கரிசல் கதைகளின் தந்தை கி.இராஜநாராயணன்.

தமிழில் அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள்:

 • 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் பிரெஞ்சு மொழியில் இருந்து மொழி பெயர்த்து எழுதியது “பரமார்த்த குரு கதை”.
 • இசுலாமிய மதத்தின் சூஃபிகள் என்பவர் சித்தர்களோடு ஒப்பாக பேசப்படுவார்கள். அவர்கள் கூறிய கதைகளுள் ஒன்று “சூஃபிக் கதைகள்”.

சிறுகதை ஆசிரியர்கள் – படைப்புகள்:

 • வரகனேரி வேங்கட சுப்ரமணிய ஐயர் (1881 – 1925)
 • குளத்தங்கரை அரசமரம் – இது தாகூரின் “காட்டேர் இது கதா” என்ற வங்க மொழியின் கதைத் தழுவல்
 • மங்கையர்கரசி காதல் – இது 8 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகும்.
 • இதில் அடங்கியசிறுகதைகளின் பெயர்கள்
  1. மங்கையர்க்கரசியின் காதல்
  2. குளத்தங்கரை அரசமரம்
  3. கமலா விஜயம்
  4. காங்கேயம்
  5. அழேன் ழக்கே
  6. எதிரொலியாள்
  7. அனார்கலி
  8. லைலா மஜ்னு

மொழிபெயர்ப்பு கதைகள்

காபூலி வாலா இது தாகூரின் படைப்பிலிருந்து கதைத் தழுவலாக எழுதப்பட்டது.

பாரதியார்

நவதந்திரக் கதைகள், கதைக்கொத்து, பூலோக ரம்பை, திண்டிம சாஸ்திரி, ஸ்வர்ண குமாரி ஆறில் ஒரு பங்கு. மேலும் ரவீந்திரநாத் தாகூர் 11 சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

புதுமைப்பித்தன்

1. ஆற்றங்கரைப் பிள்ளையார் (முதல் சிறுகதை)
2. ஞானக்குகை
3. கடவுளும்  கந்தசாமிப் பிள்ளையும்
4. ஒருநாள் கழிந்தது
5. பொய்க்குகை
6. சங்குத் தேவரின் தருமம்
7. கட்டில் பேசுகிறது
8. விநாயகர் சதுர்த்தி
9. கயிற்றிரவு
10. பொன்னகரம்
11. திருக்குறள் குமரேச பிள்ளை
12. பால்வண்ணப்பிள்ளை
13. துன்பக்கேனி
14. அகல்யை சாப விமோசனம்
15. காஞ்சனை
16. மனக்குகை ஓவியங்கள்
17. கபாடபுரம்
18. புதிய நந்தன்
19. செல்லம்மாள்
20. வழி
21. நிகும்பலை
22. நினைவுப்பாதை
23. திருக்குறள் செய்த கூத்து
24. பக்த குசேலா
25. காலனும் கிழவியும்
26. தெய்வம் கொடுத்த வரவு
27. மனித இயந்திரம்
28. உலகத்துச் சிறுகதைகள்
29. கல்யாணி
30. அன்று இரவு

சிறுகதைத் தொகுதிகள்:

1. புதுமைப்பித்தன் கதைகள்
2. புதிய ஒளி
3. ஆண்மை
4. விபரீத ஆசை
5. சித்தி

கு.ப. ராஜகோபாலன் (கிராம ஊழியன் இதழ் ஆசிரியர்)

1. நூருன்னிசா (முதல் சிறுகதை)
2. விடியுமா
3. திரை
4. பெண் மனம்
5. கிராம ஊழியன்
6. வசந்தம்
7. மன்னிப்பு
8. உண்மைக் கதை
9. கலை மகள்
10. கலா மோகினி

சிறுகதைத் தொகுதிகள்

1. கனகாம்பரம்
2. புனர்ஜென்மம்
3. காணாமலே காதல்
4. சிறிது வெளிச்சம்
5. காஞ்சன மாலை

ந. பிச்ச மூர்த்தி

1. பதினெட்டாம் பெருக்கு
2. ஞானப்பால்
3. மாயமான்
4. இரும்பும் புரட்சியும்
5. பாம்பின் கோபம்
6. முள்ளும் ரோஜாவும்
7. கொலுபொம்மை

ஜெயகாந்தன்

1. அக்னிப் பிரவேசம்
2. புதுச் செருப்பு கடிக்கும்
3. உண்மை சுடும்
4. பிரமோபதேசம்
5. இருளைத் தேடி
6. பிரளயம்
7. ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டி
8. திரிசங்கு சொர்க்கம்
9. இரவில் ஆண்மை
10. கல்யாணி
11. சட்டை
12. முன்நிலவும் பின்பணியும்
13. ஒரு பிரமுகர்
14. யாருக்காக அழுதான்
15. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க
16. ஓவர் டைம்
17. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
18. பாரிசுக்குப் போ
19. சில நேரங்களில் சில மனிதர்கள்
20. ரிஷ்மூலம்
21. ஜய ஜய சங்கரா
22. சுந்தர காண்டம்
23. கோகிலா என்ன செய்து விட்டாள்
24. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்
25. வளைகரம்
26. உன்னை போல் ஒருவன்
27. சினிமாவுக்குப் போன சித்தாளு

சிறுகதைத் தொகுதிகள்

1. உதயம்
2. ஒரு பிடி சோறு
3. தேவன் வருவாரா
4. இனிப்பும் கரிப்பும்
5. சுமை தாங்கி
6. யுக சாந்தி
7. புதிய வார்ப்புகள்
8. சுயதரிசனம்
9. குருபீடம்
10. சக்கரங்கள் நிற்பதில்லை

கல்கி (இரா.கிருஷ்ணமூர்த்தி)

1. வீணை வாணி
2. திருடன் மகன் திருடன்
3. சாரதியின் தந்திரம் (முதல் சிறுகதை)
4. கேதாரியின் தாயார்
5. காரிருள் ஒரு மின்னல்
6. அபலையின் கண்ணீர்
7. மாடத் தேவன் சுனை
8. மயில்விழிமான்
9. கனையாழியான் கனவு
10. ஸ்வப்ன லோகம்
11. திருவெழுந்தூர் சிவக்கொழுந்து
12. ஒற்றை ரோசா

அறிஞர் அண்ணா

1. பலா பலன்
2. சுடுமூஞ்சி
3. அன்னதானம்
4. பேய் ஓடிப் போச்சு
5. இரு பரம்பரைகள்
6. சூதாடி
7. செவ்வாழை
8. தஞ்சை வீழ்ச்சி
9. பிடி சாம்பல்
10. புலி நகம்
11. ராசாதி ராசா
12. சொர்க்கத்தில் நரகம்
13. ரங்கோன் ராதா
14. தசாவதாரம்
15. நீதி தேவன்
16. மயக்கம்
17. வேலைக்காரி
18. பிரார்த்தனை
19. கன்னிப்பெண் கைம்பெண் ஆன கதை
20. குற்றவாளியோ

அகிலன்

1. சத்திய ஆவேசம்
2. ஊர்வலம்
3. எரிமலை
4. பசியும் ருசியும்
5. வேலியும் பயிரும்
6. குழந்தை சிரித்தது
7. சக்திவேல்
8. நிலவினிலே
9. ஆண்பெண்
10. மின்னுவதெல்லாம்
11. வழி பிறக்கும்
12. வெள்ளைச்சோறு
13. விடுதலை
14. நெல்லூர் அரிசி
15. செங்கரும்பு
16. வேங்கையின் மைந்தன்
17. பாவை விளக்கு
18. பெண்
19. வாழ்வு எங்கே?
20. சித்திரப்பாவை – (1975 ஞானபீடவிருது)
21. கங்கா ஸ்நானம்
22. நெஞ்சில் அலைகள்
23. மிஸ்டர் வேதாந்தம்
24. சகோதரர் அன்றோ
25. கயல்விழி
26. புது வெள்ளம்
27. பெண்மலர்
28. நெஞ்சின் அலைகள்
29. நிலவினிலே
30. எரிமலை
31. எங்கே போகிறோம்
32. இராஜத்தின் மனோரதம்

கலைஞர் மு.கருணாநிதி

1. பழக்கூடை
2. தன்னடக்கம்
3. சங்கிலிசாமி
4. கிழவன் கதை
5. அரும்பு
6. முதலைகள்
7. நளாயினி

ராஜாஜி

1. நிரந்த செல்வம்
2. பிள்ளையார் காப்பாற்றினார்
3. கற்பனைக்கோடு
4. சபேசன் காபி
5. திக்கற்ற பார்வதி

கி. இராஜ நாராயணன்

1. கதவு
2. கன்னிமை
3. கோமதி
4. பேதை
5. பிஞ்சுகள்
6. கோபல்ல கிராமம்
7. கிடை
8. ஆறு
9. கரிசல் காட்டு கடுதாசி
10. கு.அழகிரி கடிதங்கள்
11. ஜடாயு
12. கரண்டு
13. மக்கள் தமிழ் வாழ்க
14. மாயமான்
15. நாற்காலி
16. புத்தக உலகம்
17. சவத்தொழிலாளர்
18. அங்கணம்
19. தாத்தா சொன்ன கதை

தி. ஜானகி ராமன்

1. பாயசம்
2. மரப்பசு
3. கொட்டுமேளம்
4. சக்தி வைத்தியம்
5. வடிவேலு வாத்தியார்
6. அன்பே ஆரமுதே
7. மோகமுள்
8. சிவப்பு ரிக்ஷ்
9. சிலிர்ப்பு
10. நாலு வேலி நிலம்
11. செம்பருத்தி
12. யாதும் ஊரே
13. கோபுர விளக்கு
14. அம்மா வந்தாள்

கு.அழகிரிசாமி (1923-70)

1. உறக்கம் கொள்வான் (முதல் சிறுகதை)
2. ஆண்மகன்
3. ஏமாற்றம்
4. அழகம்மாள்
5. ராஜா வந்திருக்கிறார்
6. புது உலகம்
7. திரிபுரம்
8. இருபெண்கள்
9. திரிவேணி
10. ஞாபகார்த்தம்
11. அன்பளிப்பு
12. இரண்டு ஆண்டும்
13. எங்கிருந்தோ வந்தார்
14. சாப்பிட்ட கடன்

சிறுகதைத் தொகுதிகள்

1. சிரிக்கவில்லை
2. தவப்பயன்
3. காலகண்டி
4. தெய்வம் பிறந்தது
5. இரு சகோதரர்கள்
6. கற்பக விருட்சம்
7. வரப்பிரசாதம்
8. இருவர் கண்ட ஒரே கனவு
9. துறவு
10. கவியும் காதலும்
11. புதிய ரோசா

டி.எஸ். இராமையா

1. பணம் பிழைத்தது
2. தழும்பு
3. நினைவு முகம்
4. மறக்கவில்லை
5. காம தகனம்
6. நட்சத்திரக் குழந்தை
7. கொத்தனார் கோயில்
8. மலரும் மணமும்
9. அடிச்சாரைச் சொல்லியழு இவர் மணிக்கொடி இதழை சிறுகதை இதழாக மாற்றியவர்.

சுந்தர ராமசாமி

1. பிரசாதம்
2. விகாசம்
3. ரத்னபாயின் ஆங்கிலம்
4. பல்லக்கு
5. செங்கமலத்தின் சோப்பு
6. தண்ணீர்
7. உணவும் உணர்வும்
8. அக்கரைச் சீமையிலே
9. பொறுக்கி வர்க்கம்
10. கோயில் காளையும் உழவு மாடும்
11. முதலும் முடிவும்
12. நாடார் சார்
13. நைவேத்தியம்
14. பிள்ளை வரமா? பிறவா வரமா?

கண்ணதாசன்

1. சேரமான் காதலி
2. ஆட்டனத்தி ஆதிமந்தி
3. மாங்கனி
4. தைப்பாவை

மு.வரதராசனார்

1. அந்த நாள்
2. செந்தாமரை
3. மண்குடிசை
4. கயமை
5. அகல் விளக்கு
6. மலர் விழி
7. வாடா மலர்
8. பெற்றமனம்
9. அல்லி
10. கரித்துண்டு
11. கள்ளோ காவியமோ
12. குறட்டை ஒலி

டி.செல்வராஜ்

1. மலரும் சருகும்
2. தோல்

இந்திரா பார்த்தசாரதி

1. குருதிப்புனல்
2. திசைகளுக்கு அப்பால்
3. ஆகாச தாமரை
4. மாயமான் வேட்டை

தி.சு.செல்லப்பா

1. சரசாவின் பொம்மை
2. மணல் வீடு
3. அறுபது
4. சத்யாகிரகி
5. வெள்ளை

வல்லிக்கண்ணன்

1. முதற்கதை
2. சந்திர காந்தங்கள்
3. நாட்டியக்காரி
4. ஆண் சிங்கம்
5. வல்லிக்கண்ணன் கதைகள்
6. வாழ விரும்பியவன்

அசோகமித்திரன்

1. புலி கலைஞன்
2. உரிமை வேட்கை
3. உத்திர ராமாயணம்
4. வாழ்விலே ஒரு முறை
5. அப்பாவின் ஸ்நேகிதர்
6. காலமும் ஐந்து குழந்தைகளும்
7. பிரயாணம்

சுஜாதா (ரங்கராஜன்)

1. அம்மா மண்டபம்
2. ஒரு அரேபியத் தீவு
3. ஒரு நாள்
4. நகரம்
5. அந்திம காலம்
6. அனாமிகா
7. எப்படியும் வாழலாம்
8. அரங்கேற்றம்
9. நிர்வாண நகரம்
10. என்றாவது ஒருநாள்
11. சுவடுகள்
12. ஜன்னல் மலர்
13. காரணம்
14. மிஸ்டர் முனுசாமி 1.2.1
15. மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
16. கொலையுதிர் காலம்
17. அரிசி
18. அனிதாவின் காதல்கள்
19. ஓடாதே
20. இளநீர்
21. கால்கள்

லா.ச. ராமாமிர்தம்

1. பச்சைக்கனவு
2. பாற்கடல்
3. மகாபலி
4. ஜனவரி இதழ்கள்

க.நா. சுப்ரமணியன்

1. பொய்த்தேவு
2. ஒரு நாள்
3. வாழ்ந்தவர் கெட்டார்

மௌனி (சுப்ரமணியம்)

1. ஏன்? (முதல் சிறுகதை)
2. தவறு (கடைசி சிறுகதை)

சிறுகதைத் தொகுதிகள்

1. அழியாச் சுடர்
2. மனக்கோலம்
3. காதல் அலை
4. மாறுதல்
5. பிரபஞ்ச கானம்
6. மனத்தேர்

நா. பார்த்தசாரதி

1. மணி பல்லவம்
2. பெண் விலங்கு
3. நீல நயனங்கள்
4. நெருப்புக் கனிகள்
5. சத்திய வெள்ளம்
6. குறிஞ்சி மலர்
7. சமுதாய வீதி
8. வலம்புரி சங்கு
9. பாண்டிமா தேவி
10. துளசி மடம்

சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

1. மணிக்கொடி
2. ஆனந்த விகடன்
3. கலை மகள்
4. கல்கி
5. கணையாழி
6. தீபம் போன்ற இதழ்கள் ஆகும்.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!