பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை – 2021 சின்னத்திரையில் ஏற்பட்ட மாற்றங்கள்! ஒரு பார்வை!

0
பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை - 2020 சின்னத்திரையில் ஏற்பட்ட மாற்றங்கள்! ஒரு பார்வை!
பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை - 2020 சின்னத்திரையில் ஏற்பட்ட மாற்றங்கள்! ஒரு பார்வை!
பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை – 2021 சின்னத்திரையில் ஏற்பட்ட மாற்றங்கள்! ஒரு பார்வை!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் 2020 ஆம் ஆண்டு பல மாற்றங்கள் நடந்துள்ளது. ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரியல் மாற்றங்கள்:

2020 ஆம் ஆண்டு முன்னணியில் இருந்து சீரியல்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கதைக்கு ஆணிவேராக இருக்கும் பல கதாபாத்திங்கள் சீரியலில் இருந்து விலகி இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய நடிகை நடிகர்கள் களமிறங்கி இருக்கின்றனர். மேலும் சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து வந்த பல சின்னத்திரை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த மாற்றங்கள் அனைத்தும் மக்களிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.

சித்தி 2 :

90’ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒன்று சித்தி சீரியல். இந்த சீரியல் முதல் சீசன் TRPயில் சாதனை படைத்த நிலையில், இரண்டாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் ராதிகா சாரதா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சீரியல் தொடங்கி சில மாதங்களில் அவர் சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியல் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் 2 ஆண்டுகளாக ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். ஆனால் சீரியலில் நடிப்பதால் முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போனது. அதனால் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலக்ஷ்மி. அவர் விஜய் டிவியில் மிர்ச்சி செந்தில் உடன் ஜோடி சேர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்தார் காரணம் சீரியலில் வேண்டும் என்றே எனக்கு சீன் கொடுக்காமல் என்னை அவர்களாக விலக வைத்தார்கள் என சொன்னார்.

தமிழ் சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவியின் ‘கயல்’ – பின்தங்கிய ‘பாரதி கண்ணம்மா’!

தொடர்ந்து அவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ‘அரண்மனைக்கிளி’ தொடரில் நடித்த மோனிஷா நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டது முதல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. அதன் பின் லட்சுமி அம்மா இறப்பு நிஜத்தை மிஞ்சும் அளவிற்கு படமாக்கப்பட்டது. கண்ணனிற்கு ஜோடியாக விஜே தீபிகா நடித்து வந்தார். ஐஸ்வர்யா கண்ணன் ஜோடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அவருக்கு அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார், அதன் பின் அந்த சீரியலில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் புகழ் சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

ரோஜா

1000 எபிசோடுகளை நெருங்கினாலும் TRPயில் முதல் இடத்தில் இருக்கும் ரோஜா சீரியலில் பல திருப்பாங்கள் அரங்கேறி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான வில்லியாக ஷாமிலி நடித்து வந்தார். அவருடைய காமெடி கலந்த நெகட்டிவ் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விஜே அக்‌ஷயா நடித்துக் கொண்டிருக்கிறார்.

வானத்தைப் போல

சன் டிவி வானத்தைப் போல சீரியலில் கதைக்கு காரணமாக இருக்கும் சின்ராசு துளசி கதாபாத்திரத்தில் நடித்த தமன் குமார் மற்றும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி இருக்கின்றனர். அவருக்கு பதிலாக தற்போது ஸ்ரீகுமார் மற்றும் மன்யா நடித்து வருகின்றனர். தயாரிப்பு சார்ந்த பிரச்னையால் ஸ்வேதா சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்தார். ஆனால் தமன் விலகியதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு இனிமேல் சீரியல் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பியாக அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் தொடர்ந்து வரும் சினிமா வாய்ப்புகள் காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக தற்போது சுகேஷ் நடித்து வருகிறார். ஒரே சீரியலில் இரண்டு கதாபாத்திரங்கள் மாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் சிபி? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியலில் மற்றொரு திருப்பமாக அமைந்தது வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனாவின் பிரசவம் தான். அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தது முதல் சீரியலில் இருந்து விலகுவாரா என பல வதந்திகள் பரவியது ஆனால் அப்படி இல்லாமல் நிறை மாதம் வரையில் நடித்துக் கொடுத்த பரீனா. குழந்தை பிறந்த பின் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!