ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன்டிவியின் ‘கயல்’ – மாஸ் காட்டும் சன்டிவி!

0
ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன்டிவியின் 'கயல்' - மாஸ் காட்டும் சன்டிவி!
ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன்டிவியின் 'கயல்' - மாஸ் காட்டும் சன்டிவி!
ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன்டிவியின் ‘கயல்’ – மாஸ் காட்டும் சன்டிவி!

சின்னத்திரை சீரியல்கள் அனைத்துமே வார வாரம் ரேட்டிங் வரிசையில் இடம் பிடிப்பதை பொறுத்து முன்னணி நிலவரம் வெளியாகிறது. இந்நிலையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரம் வெளியாகியாகியுள்ளது.

ரேட்டிங் நிலவரம்:

சின்னத்திரையில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல முன்னனி சேனல்களும் அடுத்தடுத்து பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக பல முன்னனி வெள்ளித்திரை பிரபலங்களையும் சீரியலில் அடுத்தடுத்து போட்டிபோட்டுக் கொண்டு களம் இறக்குகின்றனர். இவை ஒரு புறம் இருந்தாலும் கதையின் போகும் மக்கள் கவரும் பட்சத்தில் தான் சீரியல்கள் அதிக ரசிகர்களை பெறுகிறது. அதில், சன்டிவி மற்றும் விஜய் டிவியின் சீரியல்கள் தான் முதல் இடத்தை பிடிக்க அதிக போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 5ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

அந்த வகையில் எப்போதும் ரேட்டிங்கில் முதல் இரண்டு இடங்களை மட்டுமே பிடித்து வந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது பின்னோக்கி நகர்ந்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் ஒரே மாதிரியாக சென்று வருவது தான் இதற்கு காரணம் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதே சமயத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட கயல் சீரியல் மிகவும் நல்ல முறையில் சென்று வருவதும் இதற்கு காரணம்.

அதன்படி இந்த வார ரேட்டிங்கில் முதல் இடத்தை சன்டிவியில் கயல் சீரியலும், 2ம் இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெற்றுள்ளது. அதில் கோபி செய்து வரும் தில்லுமுல்லு தான் ரேட்டிங் முன்னிலைக்கு காரணமாக உள்ளது. அதேபோல் 3ம் இடத்தில் சுந்தரி சீரியலும், 4ம் இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் பெற்றுள்ளது. ரேட்டிங்கில் 5ம் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here