பிரபல சின்னத்திரை காதல் ஜோடி வீட்டில் நடந்த விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

0

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வைஷாலி. அவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை வைஷாலி:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அவர் தனது காதல் கணவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் இதற்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக முதன்முதலில் நடித்திருந்தார். அதன் பின் அவர் அந்த சீரியலை விட்டு விலகினார். அதன் பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார்.

ஹோட்டலை நல்லபடியாக நடத்தும் பெண்கள்.. ஜீவாவிடம் புகார் தெரிவிக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அவர் தனது கணவர் தேவ் உடன் இணைந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். அது என்ன விசேஷம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து ஜிம் ஒன்றை துவக்கி இருப்பதாகவும், அதன் திறப்பு விழா புகைப்படங்கள் தான் இவை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த காதல் ஜோடி வாழ்க்கையில் மேலும் வளர வேண்டும் என ரசிகர்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!