தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? வெளியான முக்கிய தகவல்!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58ஆக மாற்றுவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து பல லட்சக்கணக்கான ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
ஓய்வு வயது
கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதாவது தமிழகத்தில் கொரோனா பேரலை தாக்கம் காரணமாக அரசுக்கு சில நிதி நெருக்கடிகள் ஏற்பட்டதையடுத்து அரசு ஊழியர்களுக்கான பணபலன்களை கொடுக்க முடியாததால், ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றுவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இப்போது அரசின் இந்த முடிவை எதிர்பார்த்து 10 லட்சம் அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக தகவல் பெறப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!
இப்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக இருப்பதால், இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஓய்வில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு பணப் பலன்களை வழங்கவும் அரசிடம் போதிய நிதி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் அரசுத்துறையில் 33 ஆண்டு பணிபுரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்றும் மற்றவர்கள் 60 வயது வரை பணிபுரிவார்கள் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது.
அதே போல 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பலன்களை பாண்ட் பத்திரமாக கொடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. என்றாலும் இந்த பாண்ட் பத்திர முறை அரசு ஊழியர்களின் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் டிச.18,19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் மாநாடு நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு முடிவும், சட்டமன்ற பேரவையின் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.