தமிழக அரசு சார்பில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – குவியும் விண்ணப்பங்கள்!
தமிழகத்தில் தி.மு.க வழங்கிய தேர்தல் அறிக்கை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி புகைப்படம் மாற்ற கோரி விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
1000 ரூபாய் உதவித்தொகை:
நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க அணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக அணியின் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை என பல்வேறு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தலில் திமுக அணி பெரும்பான்மையான இடங்களில் தனது கால் தடத்தை பதித்தது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றபட்டு வருகிறது.
Jio vs Airtel vs BSNL vs Vi 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
நகர பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்ததை தொடர்ந்து அடுத்ததாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
இதில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 ரேஷன் கார்டு பயனர்கள் உள்ளனர். அவற்றில் குடும்ப தலைவரின் புகைப்படத்திற்கு பதில் குடும்பத்தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு வழங்கும்படி அரசு அலுவலகங்கள் மற்றும் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. எந்த வகை கார்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என இதுவரை குறிப்பிடாத நிலையில் குடும்ப தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என விண்ணப்பங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.