தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் தகவல்:

19.09.2022 மற்றும்‌ 20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.09.2022 மற்றும்‌ 22.09.2022: மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.09.2022: வடதமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.09.2022 முதல்‌ 21.09.2022 வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தமிழகத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

19.09.2022 மற்றும்‌ 20.09.2022: வடக்கு ஆந்திரகடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுஇகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

21.09.2022: வடக்கு ஆந்திரகடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!