தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கன மழையும்‌, கோயம்பத்தூர்‌, சேலம்‌, ஈரோடு, கிருஷ்ணஒரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

05.09.2021: நீலகிரி, கோயம்பத்தூர்‌, கிருஷ்ண ஒரி, திருப்பத்தூர்‌, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை,
காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

06.09.2021: நீலகிரி, கோயம்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய (திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காகி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

இந்திய IT துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 2022 ஆம் நிதியாண்டில் திட்டம்!

07.09.2021 08.09.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய வங்க கடல்‌ பகுதியில்‌ அடுத்த 48 மணி நேரத்தில்‌ ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன்‌ காரணமாக

வங்ககடல்‌ பகுதிகள்‌

04.09.2021, 05.09.2021: மத்திய வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

05.09.2021 முதல்‌ 07.09.2021 வரை: கேரள மற்றும்‌ கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

BSNL பயனர்களுக்கு ஷாக் நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் பிளான் நீக்கம்!

04.09.2021 முதல்‌ 08.09.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடை இடையே 60 இலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!