வேலூர், திருப்பத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
வேலூர், திருப்பத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
வேலூர், திருப்பத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
வேலூர், திருப்பத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌, வட மாவட்டங்களான வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி , காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌ திருச்‌சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

01.10.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மமை பெய்யக்கூடும்‌ , தென்‌ மாவட்டங்கள்‌ (தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி), டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌) மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

02.10.2021 முதல்‌ 04.10.2021 வரை: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌, தென்‌ மாவட்டங்கள்‌ (தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி), டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌) மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

EPFO Balance செக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌

29.09.2021: தெற்கு இலங்கை கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

02.10.2021 முதல்‌ 04.10.2021 வரை: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுததிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here