தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்.3 மற்றும் 5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்.

03.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌,

04.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யும்.

அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் – அரசு அதிரடி!

05.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌,

06.09.2021, 07.09.2021: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்ககடல்‌ பகுதிகள்‌:

03.09.2021, 04.09.2021: தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

05.09.2021: தெற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

06.09.2021, 07.09.2021: வடக்கு வங்ககடல்‌, மத்‌திய வங்க கடல்‌ மற்றும்‌ வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

05.09.2021 முதல்‌ 07.09.2021 வரை: கேரளா மற்றும்‌ கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

03.09.2021 முதல்‌ 07.09.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!