தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

24.09.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, சேலம்‌, நாமக்கல்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

25.09.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும்‌.

26.09.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி,
சேலம்‌, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

27.09.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

OLA Electric Scooter தயாரிப்பு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

23.09.2021: சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ ஆந்திர கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌.

23.09.2021, 24.09.2021: பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌.

26.09.2021, 27.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரி கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!