தமிழகத்தில் செப்.25 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் செப்.25 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.25 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் செப்.25 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று வேலூர்‌, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்களை ஓட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌

22.09.2021: திருவள்ளூர்‌, வேலூர்‌, காஞ்‌சிபுரம்‌, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு இல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டம் – நாள் ஒன்றுக்கு 90,000 மருத்துவ ஆலோசனைகள்!

23.09.2021: டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

24.09.2021: கடலூர்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

25.09.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பகலில்‌ தெளிவாக காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ மாலை மற்றும்‌ இரவு நேரங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!