தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, தேனி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌
பெய்யக்கூடும்‌.

02.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌௪, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்‌ராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

03.09.2021: நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, இருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, புதுக்கோட்டை, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

புதுச்சேரியில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!!

04.09.2021: நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஈரோடு, நாமக்கல்‌, தேனி, திண்டுக்கல்‌, வேலூர, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

05.09.2021: நீலகிரி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதுகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்ககடல்‌ பகுதிகள்‌:

01.09.2021, 02.09.2021: வட தமிழ்நாட்டின்‌ கடலோரப்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

05.09.2021: கேரள கடலோர பகுதிகள்‌, மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

01.09.2021 முதல்‌ 05.09.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்தய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!