தமிழகத்தில் அக்.12 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

3
தமிழகத்தில் அக்.12 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அக்.12 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அக்.12 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

தென்‌மேற்கு பருவகாற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் வட மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

10.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.

அரசு பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!

11.10.2021: வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் தேர்வு? விரைவில் கால அட்டவணை வெளியீடு!

12.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யகூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌கடல்‌ பகுதிகள்

08.10.2021 முதல்‌ 10.10.2021: அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அக்.11 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

11.10.2021,12.10.2021: தெற்கு வங்க கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுவிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்

08.10.2021, 09.10.2021: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!